என் படத்தை தடை செய்ய முயன்றால் நடிகை ஸ்ரேயா மீது நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்று பட அதிபர் மலேசியா பாண்டியன் கூறியிருக்கிறார்.
ஸ்ரேயா மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி, பிருத்விராஜிடன் “போக்கிரி ராஜா” என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை பட அதிபர் மலேசியா பாண்டியன் தமிழில் “ராஜா போக்கிரி ராஜா” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கும் நிலையில், ஸ்ரேயா “போக்கிரி ராஜா” படத்தை தயாரித்த தாமஸ் ஆண்டனி மீது தென்னிந்திய சங்கத்தில் புகார் செய்திருக்கிறார்.
இது குறித்து ஸ்ரேயா, “போக்கிரி ராஜா படத்தை, வேறு எந்த மொழியிலும் வெளியிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டோம். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் மீறி தமிழில் வெளியிடயிருக்கிறார். இதனால் அவர் மீது புகார் அளித்தேன்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழில் “ராஜா போக்கிரி ராஜா” மொழிமாற்றம் செய்துள்ள மலேசியா பாண்டியன் கூறியதாவது:
“நான் ’போக்கிரி ராஜா’ படத்தின் டப்பிங் உரிமையை தாமஸிடமிருந்து வாங்கி முறையாக பதிவு செய்துள்ளேன். எனக்கும், ஸ்ரேயாவுக்கும் எந்த விதமான நேரடி ஒப்பந்தம் கிடையாது. அப்படி இருக்கையில் என் திரைப்படத்தை தடை செய்ய வழக்கு தொடர்வது நியாயமற்ற செயல். தென்னிந்திய நடிகர் சங்கமும், தாமஸும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும். ஆனால் எந்த ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ என் படத்தை தடை செய்ய முயன்றால், என்னுடைய நஷ்டங்களுக்கு அவரே பொறுப்பாவார்கள். அப்படி முயற்சிப்பவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்” என்று கூறினார்.
0 comments: