• முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்: மெரீனா நாயகன் உறுதி



    சின்னத்திரையில் தொகுப்பாளராக மிளிர்ந்த சிவகார்த்திக்கேயன், இயக்குனர் பாண்டிராஜின் 'மெரீனா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
    இயக்குனர் எழில் இயக்கும் 'மனம் கொத்திப் பறவை' என்னும் நகைச்சுவை கலந்த கிராமத்து காதல் படத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வருகிறார்.

    கொலிவுட் படங்களில் முத்தக்காட்சியில் நடிப்பது எனக்கு விருப்பம் இல்லை மேலும் இது பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், நடிப்பில் உங்களுக்கென ஏதும் கொள்கை உண்டா என்று என்னிடம் கேட்டுள்ளார்கள்.

    நான் நடிக்கும் படத்தை என் அம்மா, அக்கா, மனைவி என எல்லோரும் முகம் சுழிக்காமல் பார்க்கவேண்டும், அப்படி ஒரு படத்தில்தான் நடிக்க நினைக்கிறேன்.

    அவர்களால் ரசிக்க முடியாத முகம் சுடிக்கக்கூடிய படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். மேலும் அழுத்தமான முத்தக்காட்சிகளில் எனக்கு உடன்பாடில்லை யதார்த்தமாக அது அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment