• 3 பட ரிலீஸ் ஏப்ரல் 14 தள்ளிப்போனது ஏன்?



    கொலவெறி பாடலின் ஹிட்டால் தனுஷ் பாலிவுட் ஹீரோவாகி பரபரப்பு கிளப்ப, தற்போது அதை விட பரபரப்பாகிக் கிடக்கிறது 3 படத்தின் வியாபார ஸ்டேடஸ்! பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று  ரிலீஸ் அறிவிக்கப்பட்டு, தற்போது ஏப்ரல் 14 அன்று  ரிலீஸ் உறுதி என்று சொல்லிவிட்டார்கள்.


    இப்படி 50 நாட்கள் ரிலீஸை தள்ளிபோட என்ன காரணம் என்று விசாரித்தால், 3 படத்தின் அதகள வியாபார ஏரியாவை காரணமாகச் சொல்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரிராஜா அலுவலகத்தில்.

    சூர்யாவின் 7-ஆம் அறிவு படத்துக்கு இணையாக ஒவ்வோரு ஏரியாவிலும் விலைக்குக் கேட்டுக் கொண்டிருகிறார்களாம். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்க, யூடிவி, பிக் எண்டெர்டெயிண்மெண்ட், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் என பல நிறுவனங்கள் போட்டி போட யாருக்கும் கொடுக்காமல், தன்னை வளர்த்து விட்ட விநியோகஸ்தர்கள் சமூகத்துக்கு ஏரியா வாரியாக படத்தை விற்க இருக்கிறாரம் காஸ்தூரிராஜா.

    படத்தை விலைக்கு கேட்டு வரும் விநியோகஸ்தர்களிடம் தனது மருமகளின் புகழைப்பாடிக்கொண்டிருகிறார் என்கிறார்கள். ஆனால் மகனும் மருமகளும் படத்தை சன் டிவிக்கு மொத்தமாக கொடுத்து விடலாம் என்று அடம் பிடிக்கிறார்களாம்.மெட்டுப்போட்ட இசையமைப்பாளர் தீனா, சூழ்நிலை படத்தில் வில்லனாக அறிமுகமானர்.

    “ஒரு தயாரிப்பாளரின் மனம் குளிர வைக்கும் டைரக்டர் அவர். ‘3’ படத்தை வெறும் ஐம்பதே நாட்களில் இயக்கி முடித்துத்தந்தார் என்று சொன்னால் நம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மையில் நடந்தது அதுதான்” என்று சொல்லும் கஸ்தூரிராஜாவுக்கு 3 படத்தை பத்தே கோடியில் முடித்து விட்டார் என்கிறார்கள்.

    தற்போது சன் டிவி இந்தப் படத்திம் மொத்த அவுட் ரேட் வேல்யூவாக 50 கோடியை கோட் செய்து பேரம் பேச..ஜெயா டிவி 52 கோடி தரத்தயார் என்று தகவல் கிடைக்கிறது. 3 படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதற்கு காரணம் இவை தானாம்..! இதேவேளை திருடா திருடி படத்தை போன்று, இப்படத்தின் வினிநோக உரிமையையும் ஏலத்தில் விடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment