உலக நாயகனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் திருப்பதி கோவிலில் தரிசணம் செய்தார்.
ஸ்ருதியின் ‘3’ படம் இம்மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஸ்ருதி நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று, அங்குள்ள வெங்கடாசலபதியை பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
அதோடு நெய்வேத்தியத்துடன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இவர்களிடமிருந்து விடுபட்டு காரில் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கும், காளகஸ்தியிலுள்ள கோவிலுக்கும் சென்று சாமி தரிசணம் செய்தார்.
காளகஸ்தியிலும் இவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். ஸ்ருதி அவர்களிடம் கோவிலில் அமைதியாக இருக்கும் படிக் கேட்டுக்கொண்டார்.

0 comments: