சில காலம் தமிழில் வாய்ப்புகள் இல்லாமலிருந்த கவர்ச்சி நடிகை மும்தாஜ் மீண்டும் வில்லி வேடத்தில் ரீஎண்ட்ரி ஆகிறார்.
”சிறுத்தை” படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சகுனி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். அரசியல்வாதியின் பின்னணியை கதைகளமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகை மும்தாஜ் தன் கவர்ச்சியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவையே கிறங்கடித்தவர். தற்போது இவர் ”சகுனி” படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இவர் கவர்ச்சியான நடிகையாக வலம் வந்த போது 'ராஜாதி ராஜா' படத்தில் வில்லியாக நடித்து தன் வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

0 comments: