இயக்குனர் அமீரின் 'ஆதி பகவன்' படத்தில் ஆக்ஸன் காட்சிகளில் நடித்த ஜெயம் ரவிக்கு கொலிவுட்டின் முன்னணி நாயகர்கள் உற்சாக 'டானிக்' கொடுத்துள்ளார்கள்.
இது பற்றி ஜெயம் ரவி கூறுகையில் நான் ஆதி பகவன் படத்தின் ஆக்ஸன் காட்சிகளில் நடிக்க கடுமையாக உழைத்துள்ளேன்.
கொலிவுட்டின் எனது நட்பு நாயகர்களான ஆர்யா, ஜீவா, விக்ரம் அண்ணன் ஆகியோர் என்னுடைய ஆக்ஸன் திறமையை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.
தாய் லாந்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் நான் 'டூப்' போடாமல் நடித்துள்ளேன். உயரத்திலிருந்து குதிக்கும் காட்சி மிகவும் கடுமையாக இருந்தது, இதில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளேன்.
இந்தக்காட்சி நன்றாக வந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார், பூலோகம் படத்தில் பாக்ஸராக முற்றிலும் வித்தியாசமான 'கெட்டப்'பில் வருகிறேன்.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் வரும் பாக்ஸர் கேரக்டரைப்போல இது இருக்காது.மேலும், இயக்குனர் சமுத்திரக்கனியின் படம், ஜெயம் ராஜா இயக்கும் படம் என அடுத்தடுத்து நடிக்க போகிறேன் என்று 'ஆதி பகவன்' பட நாயகன் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

0 comments: