தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் “3”. இந்த படம் “ஒய் திஸ் கொலைவெறி” பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமானதோடு, பாடலை பாடிய தனுஷிற்கும் ஒரு அந்தஸ்தை தந்தது.
புதுமுகம் அனிரூத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடியுள்ள ”கொலவெறி” பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பாடல் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ”3” படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
இப்படம் அனைத்து ஏரியாக்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளன. அதுவும், குறிப்பாக ஆந்திராவிலுள்ள ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விலை போய் உள்ளது. இந்த அளவுக்கு தனுஷின் எந்த படமும் விலை போகவில்லை. இதற்கு முக்கிய காரணம் படத்திலுள்ள ”கொலவெறி” பாடல் தான்.
மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாகும் தனுஷின் “3” படத்தை அடுத்து தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார்.
0 comments: