• நடிகை அசினுக்கு பிடித்த அந்த '4' கார்கள்



    கோலிவுட்டில் ஒரு ரவுண்டுக்கு பின், பாலிவுட்டில் ரவுசு விடும் அசினுக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியமாம். இதனால்தான் பாலிவுட்டுக்கு போன பிறகு தனது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான கார்களுடன் அணி வகுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.


    அசினிடம் தற்போது சொந்தமாக 4 கார்கள் உள்ளது. இதி்ல், 3 கார்கள் அவரது பெற்றோர் பரிசாக கொடுத்த கார்கள் என்பதுதான் ஹைலைட். கடந்த 2009ம் ஆண்டு அவர் நடித்த கஜினி படம் சூப்பர் ஹிட் ஆனதால் அகமகிழ்ந்து போன அசின் பெற்றோர் புத்தம் புதிய மெர்டிசிஸ் பென்ஸ் காரை வாங்கித் தந்தனராம்.

    இதைத்தொடர்ந்து, 2010ம் ஆண்டு அசின் பிறந்தநாளுக்கு அவரது பெற்றோர் ஆடி சொகுசு கார் ஒன்றை பரிசளித்தனராம். இருப்பினும், டொயோட்டோ கேம்ரி சொகுசு காரில்தான் அசின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வந்தார். இதைபற்றி கேட்டால் எல்லாம் அந்த காரின் ராசிதான் கேம்ரியின் மகிமையை பற்றி காது கடிக்கிறார்.

    இந்த நிலையில், அசினுக்கு பிராண்டு நியூ பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 பிரிமியம் எஸ்யூவி காரை அவரது பெற்றோர் சமீபத்தில் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளனராம். அதில்தான், தற்போது அசின் வலம் வருகிறாராம். மேலும், தனக்கு 4 என்ற எண் ராசியாக இருப்பதால், அனைத்து கார்களுக்கும் 0004,400,40,4000 ஆகிய பதிவு எண்களாக வாங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment