• 7 UP விளம்பர தூதுவராக சிம்பு



    கொலிவுட் நட்சத்திர நாயகன் சிம்பு, 7 UP விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சினிமாவில் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருபவர் நாயகன் சிம்பு.

    நடிப்பு, இசை, இயக்கம் என எல்லா துறைகளிலும் தனக்கென்று ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்துள்ளார்.


    இதற்கிடையில் நாயகன் சிம்பு, விளம்பரத்துறையிலும் வெற்றிவாகை சூடப்போகிறார் என்று கொலிவுட்டில் பரவலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    நாயகன் சிம்பு, பிரபல குளிர்பான நிறுவனமான 7 UPற்கு விளம்பரத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து நாயகன் சிம்பு கூறியதாவது, 7 UP விளம்பரத்தூதராக நியமானது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விரும்பி பருகும் பானங்களில் 7 UP முக்கியமானது.

    7 UP பானத்தின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எனது உழைப்பு முக்கிய பங்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment