திருமண வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட இன்னும் நேரம் இருக்கிறது, தற்போது என் முழுகவனமும் சினிமாவில் தான் என்று கூறியுள்ளார் ஜெனிலியா.
பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஒரிஜினல் தெலுங்கு படத்தில் ஹாசினி என்ற பாத்திரத்தில் நடித்தேன்.
இதற்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. மேலும் இப்படத்துக்கு பிறகு ஆந்திராவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு ஹாசினி என்று பெயர் வைத்தனர்.
அதேபோன்று கதா என்ற படத்தில் சித்ரா என்ற வேடமும் பேசப்பட்டது. ஒரே சாயல் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை.
ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை அதிகளவில் குறைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. முன்பு வருடம் முழுவதும் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்வேன்.
ரிதேஷை சிறுவயதிலிருந்தே எனக்கு தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அவரிடம் உள்ள குணங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் ஏற்கனவே அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போதைக்கு நான் முழுமூச்சாக குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமும், வயதும் இருக்கிறது.
திருமணத்துக்கு பிறகு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துள்ளேன். இந்தியில் நடித்துள்ள சந்தோஷ் சுப்ரமணியம் ரீமேக் இன்னும் வெளியாகவில்லை. எனக்கேற்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.

0 comments: