கொலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.
கோச்சடையான் படக்குழுவினர் அனைவரும் தற்போது லண்டனில் இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள பைன்வுட் திரையரங்கில் கோச்சடையானுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
பைன்வுட் திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கான படப்பிடிப்புகள் அதிகமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோச்சடையான் படக்குழுவில் ராதிகா சரத்குமாரும் இணைந்துள்ளார். படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற சரத்குமார், மனைவி ராதிகாவையும் உடன் அழைத்துச்சென்றுள்ளார்.
படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினியும் ராதிகாவும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து ராதிகா கூறியதாவது, படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியுடன் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டேன். கேரவன் இல்லாமல் வெட்டவெளியில் சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்த நிகழ்வுகளை ரஜினி சொல்லி மகிழ்ந்தார் என்று கூறியுள்ளார்.
0 comments: