தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இயக்கி, நடிக்கும் கொலிவுட் நாயகன் லாரன்ஸ் தனக்கு பொருத்தமான நாயகியை தேடி வருவதாக திரையுலகில் தகவல் வெளியாகியுள்ளன.
பிரபாஸ், தமன்னா, தீக்ஸா சேத் ஆகியோரின் நடிப்பில் தெலுங்கில் பரபரப்பாக பேசப்பட்ட 'ரீபெல்' படத்தை தமிழில் லாரன்ஸ் இயக்குகிறார்.
இதில் லாரன்சே நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பாடலுக்கு அதிரடியாக நடனமாட முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது, கொலிவுட்டிற்கு தகுந்த மாதிரி ரீபெல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்.
தற்போது முனி-3ம் பாகத்தில் நடிக்க பொருத்தமான நாயகியை தேடி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லாரன்ஸ் இயக்கும் திரைப்படங்கள் நகைச்சுவையுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக அமைவதால் கொலிவுட் நாயகிகள் லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: