விருதுகளை எதிர்பார்த்து ஒரு போதும் நடித்ததில்லை என்று நாயகி டாப்ஸி கூறியுள்ளார்.
கொலிவுட்டில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நாயகி டாப்ஸி.
ஆடுகளம் படத்திற்காக தனுசுக்கு கடந்த வருடம் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நாயகி டாப்ஸி, சினிமாவிற்கு வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த விருதும் இதுவரை கிடைக்க வில்லை.
இதனால் திரையுலகில் டாப்ஸி, விருதுகள் எதுவும் கிடைக்காத விரக்தியில் இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து நாயகி டாப்ஸி, விருது கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. விருதுகள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
அதற்காக விருது பெறாத நடிகர், நடிகைகள் எல்லோரும் திறமைசாலிகள் அல்ல என்று கூற முடியாது.
எனது நடிப்பை பார்த்து என்னுடைய தாய் பாராட்டினாலே போதும் அது ஓஸ்காரை விட உயர்ந்த விருதாக இருக்கும். விருதுகளை எதிர்பார்த்து நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments: