தமிழ்திரையுலகின் ஹீரோ போட்டியில் ரஜினிக்கு அடுத்த நிலையில் இருந்து வருகிறார் சூர்யா. ‘7ஆம் அறிவு’ படத்தை விட, அஜித்தின் ‘மங்காத்தா’ ஐந்து கோடி ரூபாய் அதிகம் வசூலித்து இருந்தாலும், அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் வசூலில் குறைவைக்காமல் இருந்தால்தான் சூர்யாவின் இடத்தை அஜித்தால் அசைத்துப் பார்க்க முடியும்.
சூர்யாவுக்கு இத்தனை உயரமான இடத்தை கொடுத்தவர்கள் தமிழ் படங்களும், தமிழ் ரசிர்களும்தான். ஆனால் அதை மறந்து விட்டார் சூர்யா.
சினிமாக்காரர்கள் ஏற்றிவிட்ட ஏணியை உதறித் தள்ளுவது என்ன புதுசா? என்பதை சூர்யாவும் நிரூபித்து விட்டார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் ‘மாற்றான்’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தின் இயக்குநர், ஹீரோ ஓரிரண்டு பேருமே தமிழர்கள். இந்தபடத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ஹைதராபாத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்கள் சூர்யா படத்துக்கு 50 முதல் 60 கோடி ரூபாயை தியேட்டரில் டிக்கெட் பணமாக கொடுத்து அவரை முதல் இடத்தில் வைத்திருக்க, முதல் பிரஸ் மீட்டை ஆந்திராவில் நடத்தி தமிழ் ரசிகர்களுக்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்திருக்கிறார் சூர்யா என்று கோடம்பாக்கத்தில் குரல் ஒலிக்கிறது. (பாத்து சார் ஓவரா பண்ணாதீங்க.. அப்பறம் ஒரேயடியா அடக்கிடுவாங்க..)
ஏற்கனவே தெலுங்குச் சேனல் ஒன்றின் விருது விழாவில் “தமிழ் ரசிகர்களை விட வெறித்தனமாக தன்னை நேசிப்பவர்கள் ஆந்திர ரசிகர்கள்தான்” என்று சொல்லி தனது தமிழ்ப்பற்றை காட்டியிருந்தார் கார்த்தி.
தற்போது அண்ணன் சூர்யா! ஆமாமா.. இடத்துக்கு தகுந்த மாதிரி இப்டிலாம் பேசுனாத்தானே பொழைக்க முடியும்....!
0 comments: