வங்காள மொழியில் ரீமேக் ஆகும் தெலுங்கு படத்தை கிரிக்கெட் வீரர் கங்குலி தயாரித்து நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் பின்னணியில் அமைந்த ‘கோல்கொண்டா ஹை ஸ்கூல்’ படம் வங்க மொழியில் ரீமேக் ஆகிறது. இதில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி ‘கோல்கொண்டா ஹை ஸ்கூல்’ பட தயாரிப்பாளர் ராம் மோகன் பருவு கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தினர் என்னை அணுகி படம் பற்றி பேசினர்.
அப்போது கோல்கொண்டா படத்தை வங்க மொழியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அதற்கான உரிமை வேண்டும் என்றும் கேட்டனர்.
அவர்களிடம் இதை தயாரிக்கப்போவது யார், நடிக்கப்போவது யார் என்று கேட்டேன். அப்போது அவர்கள் கிரிக்கெட் பின்னணியிலான கதை என்பதால் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தயாரித்து கிரிக்கெட் கோச்சாக நடிக்க உள்ளார் என்றனர்.
இதையடுத்து வங்க மொழி உரிமையை நான் வாங்கியுள்ளேன், மற்ற எந்த மொழியிலும் ரீமேக் செய்ய உரிமை தரவில்லை.
இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார். இதுபற்றி கங்குலி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் தெரிவிக்கையில் ,‘‘கோல்கொண்டா... படத்தை நான் பார்க்கவில்லை.
இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை’’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: