• சகுனியில் பிரகாஷ்ராஜ்!


    சிறுத்தை' படத்தின் வரவேற்பை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் 'சகுனி'. ப்ரணீதா, சந்தானம், ராதிகா சரத்குமார், மும்தாஜ், சலீம் கோஸ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். சங்கர் தயாள் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.


    இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ராஜா ஆகியோர் இப்படத்தினை பார்த்திருக்கிறார்கள். சலீம் கோஸின் நடிப்பு அவர்களுக்கு திருப்தி தரவில்லை
    .
    இந்நிலையில் சலீம் கோஸ் காட்சிகளை நீக்கி விட்டு அவருக்கு பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.


    'சகுனி' படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

0 comments:

Post a Comment