• ‘என்றென்றும் புன்னகை’ யுடன் ஜீவா – த்ரிஷா..!!



    நடிகர் ஜீவாவும், நடிகை த்ரிஷாவும் முதன் முதலாக புதிய படம் ஒன்றில் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்திற்கு ’என்றென்றும் புன்னகை’ என்று பெயர் சூட்டியுள்ளனர். படத்தில் இந்தியில் வெளியான ‘ராஸ்கல்’ படத்தில் நடித்த லிஸா ஹெய்டன் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.


    இசையை மையப்படுத்தி ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகிறது இப்படம். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் போன்ற பணிகளை அஹமத் கவனித்து வருகிறார்.

    சென்னையில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதை தொடர்ந்து நியூயார்க், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சிசல்ஸ் தீவுகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. படத்தின் இசைக்கோர்ப்பு பணிக்காக ஹாரீஸும், அஹமத்தும் இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்கள்.

0 comments:

Post a Comment