முன்னனி நடிகையான அசின் சமீபத்தில் வித்யா பாலனை போல் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
இரண்டு ஹீரோயின் கேரக்டர்கள் உள்ள படங்களில் நடிக்கும் போது, நான் பாதுகாப்பான நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.
அதை கவனத்தில் கொண்டுதான் ஒன்றுக்கும் அதிகமான ஹீரோயின் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மற்ற நடிகைகளுடன் நடிக்கும்போது, அவர்களுடன் நன்றாக பழகுவதால், எனது தொழில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இந்தியில் வாய்ப்பு கிடைத்தபோது நடிக்க ஒப்புக்கொண்டேன். அதனால் தமிழில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. விஜயுடன் நடித்த ‘காவலனு’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல கேரக்டர் அமையவில்லை. அப்படி அமையும் போது கண்டிப்பாக நடிப்பேன்.
டாப்சி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்தியில் அறிமுகமானதால் போட்டியா..? என்று கேட்கிறார்கள். தினமும் நிறையபேர் இந்தியில் அறிமுகமாகிறார்கள். அதனால் யாரும் போட்டி கிடையாது. எல்லோரும் திறமையானவர்கள். மேலும், ”டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் கவர்ச்சியாக நடித்ததுபோல் நடிப்பீர்களா...?” என்கிறார்கள். அதுபோல் என்னால் கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் எனக்கு பொருந்தாது.
இவ்வாறு அசின் கூறினார்.

0 comments: