முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை அமலா பால் “காதலில் சொதப்புவது எப்படி” படத்தையடுத்து ஜெயம் ரவிவுடன் புதிய படம் ஒன்றில் ஜோடி சேர்கிறார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ”பூலோகம்” என்று பெயரிட்டுள்ளனர். இயக்குனர் ஜனநாதனின் அசிஸ்டெண்ட் கல்யான் கிருஷ்ணன் இயக்குகிறார்.
இதில் ஜெயம் ரவி குத்து சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாகிறது.
ஜெயம் ரவி தற்போது அமீரின் இயக்கத்தில் “ஆதி பகவான்” பட ஷீட்டிங்கில் இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு “பூலோகம்” படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

0 comments: