தெலுங்கில் சிறந்த இசையமைப்பாளர் விருதை இளையராஜாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவுக்கும் சென்னையில் வரும் 23ம் தேதி நடக்கும் விழாவில் கவர்னர் ரோசையா விருது வழங்குகிறார்.
தெலுங்கு புத்தாண்டை ஆண்டு தோறும், சென்னையில் இயங்கிவரும் ஸ்ரீகலா சுதா அசோசியேஷன்ஸ் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி சிறந்த தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு சினிமா நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 14வது ஆண்டு தெலுங்கு புத்தாண்டையொட்டி ‘மஹிலா ரத்னா’ மற்றும் ‘யுகாதி புரஸ்கார்’ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விருதுகள் விவரம் :
சிறந்த நடிகருக்கான விருது – ராமகிருஷ்ணா (ஸ்ரீராமராஜ்யம்)
சிறந்த நடிகைக்கான விருது – நயன்தாரா (ஸ்ரீராமராஜ்யம்)
சிறந்த இயக்குனர் - பப்பு (ஸ்ரீராமராஜ்யம்)
சிறந்த படம் – ஸ்ரீராமராஜ்யம்
சிறந்த இசையமைப்பாளர் – இசைஞானி இளையராஜா (ஸ்ரீராமராஜ்யம்)
சிறந்த அறிமுக நடிகை - ஸ்ருதி ஹாசன் (ஓ மை பிரண்ட்)
ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளை வரும் 23ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசையா பங்கேற்று விருது வழங்குகிறார்.

0 comments: