இன்று (மார்ச் 5) மாலை ஒரு கல் ஒரு கண்ணாடி(ஓகே ஓகே) படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் அரங்கில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும், கார்த்தியும் கலந்து கொண்டு இசை தகட்டையும், டிரெயிலரையும் வெளியிட இருக்கிறார்கள்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குனர் எம். சிவா, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலினை முதன் முறையாக ஹீரோவாக அறிமுகாகும் செய்திருக்கிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தையும் உதயநிதி தயாரிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மேலும், சந்தானத்தின் காமெடி பிரதானமாக பேசப்படுகிறது. ஏற்கெனவே வெளியான ஒரு ட்ரெயிலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
அடுத்த மாதம் இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.
0 comments: