ஆத்திரக் காரணுக்கு புத்தி மட்டு என்பார்கள் அதே போல் கோபத்தால் சாதிக்க முடியாததை சிரிப்பால் சாதிக்க முடியும் என்று நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார்.
பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜனனி ஐயர்.
அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர், அமீரின் மாணவர் அஸ்லாம் இயக்கும் "பாகன் படத்திலும் நடித்து வருகின்றார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஜனனி, அந்த சிரிப்பிற்கான காரணத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். கோபத்தால் சாதிக்க முடியாததை, புன்னகையால் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
சினிமாவில் ஜெயிக்க இந்த புன்னகை எப்பவும் என் இதழ்களில் இருந்துக் கொண்டே இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஜனனி.
டைரக்டர் பாலாவை என் வாழ்கையில் யாருடனும் ஒப்பிட முடியாது. பாலா சார் இப்ப கூப்பிட்டாலும் அதே நன்றியோடு பேசுகிறேன்.
என் வீடு, கமிட் ஆகிற படங்கள் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்கிறேன். பாகன் பட வாய்ப்பை நான் முதலில் பகிர்ந்துக்கொண்ட நபர் பாலாதான் என்று பெருமையுடன் கூறியுள்ளார்
0 comments: