• ராஜ்கிருஷ்ணாவுடன் இணையும் நமீதா



    ஒரு நடிகையின் வாக்குமூலம் இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் நாயகி நமீதா இணைய உள்ளார்.

    கொலிவுட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு சோனியா அகர்வால் ஒரு நடிகையின் வாக்குமூலம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


    சமுதாயத்தில் பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

    தற்போது அச்சம் என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் நாயகியாக நடிக்க நமீதாவிடம் திகதிகள் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியதாவது, பெண்களுக்கு சமுதாயத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. அவர்கள் அந்த பிரச்சினைகளை கண்டு அச்சம் கொள்ளக்கூடாது.

    தன்னை நோக்கி வரும் பிரச்சினைகளை பெண்கள் சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

    இதுபோன்ற கதை அம்சத்தை மையமாக வைத்தே அச்சம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளேன் என்று இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment