கொலிவுட்டில் கார்த்தியின் நடிப்பில் 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிப்பது பற்றி டாப்சீ பேசியுள்ளார்.
தெலுங்கில் 'வீரா' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம், தமிழில் வீரய்யா என்ற பெயரில் வெளியாகிறது.
கொலிவுட்டில் இரண்டு முன்னணி நாயகிகள் இணைந்து நடிப்பது இன்றைக்கு பெரும் கனவாக உள்ளது.
ஆனால்,தெலுங்கில் டாப்சீ, காஜல் அகர்வால் இருவரும் நடித்துள்ளார்கள். இந்தப்படத்தில் ரவி தேஜா, ஷாம் இருவரும் நடித்துள்ளார்கள். ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார்.
வீரய்யா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்துள்ளது. இதில் கொலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தப்படத்தை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என நினைக்கிறேன் என்று நாயகி டாப்ஸி கூறியுள்ளார்.
தற்போது சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கும் 'தருவு' படத்தில் ரவி தேஜா உடன் இணைந்து நடிக்கிறேன்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
வீரய்யா படத்தில் நடித்துள்ள டாப்சீ, லட்சுமி மஞ்சு தயாரிக்கும் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடிக்கிறார்.
0 comments: