• சித்தார்த் நடிப்பில் வெளியாகும் ஸ்ரீதர் படம்



    சித்தார்த் நாயகனாக நடித்த 'OH MY FRIEND' என்ற தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    கொலிவுட்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து படத்தில் அறிமுகமான சித்தார்த், தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நாயகனாக இருந்து வருகிறார்.


    சமீபத்தில் பாலாஜி இயக்கத்தில் வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சித்தார்த் தமிழ் படங்களில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

    வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சித்தார்த்.

    இதனிடையே, படக்குழுவினர் சித்தார்த் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்களையும் தமிழில் மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த 'OH MY FRIEND' என்ற படத்தினை 'ஸ்ரீதர்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

    சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரின் தமிழ் மதிப்பு போன்றவை இந்த படத்தின் வசூலுக்கு பயன்படும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

    எதிர்வருகிற கோடை விடுமுறை கொண்டாட்டமாக 'ஸ்ரீதர்' திரையிடப்பட உள்ளது.

0 comments:

Post a Comment