• மீண்டும் திரைக்கு வந்தார் கர்ணன்



    சிவாஜியின் ‘கர்ணன்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீனப் படுத்தப்பட்டு சென்னையில் இன்று திரையிடப்பட்டது.
    கடந்த 1964ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்து வெளியான கர்ணன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ளது.


    இப்படத்தை திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாந்தி சொக்கலிங்கம் வெளியிட்டுள்ளார்.

    இன்று காலை சென்னையிலுள்ள சத்யம், எஸ்கேப், சாந்தி, சங்கம், அபிராமி, பி.வி.ஆர் உள்ளிட்ட பல திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் வெளியிடப்பட்டது.

    சிவாஜி ரசிகர்கள் அனைவரும் திரையரங்க வாசலில் குவிந்து, தங்களது மகிழ்ச்சியை சப்தமிட்டு வெளிப்படுத்தினர்.

    ஒரு ரசிகர் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். படம் பார்க்க வந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    இதற்கு போட்டியாக எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோவில் திரைப்படமும் வெளியிடப்பட்டது.

    எம்.ஜி.ஆர் ரசிகர்களும் உட்லெண்ஸ் திரையரங்க வாசலில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

0 comments:

Post a Comment