பிரபல டூத் பேஸ்ட் நிறுவனம் ஒன்று விளம்பர தூதுவராக இருந்த திரிஷாவை நீக்கிவிட்டு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளது.
திரையுலக நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள்.
சினிமாவில் ரசிகர்கள் தங்களை பார்ப்பதை விட, தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தால் நேரடியாக ரசிகனின் வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பது தான் காரணம்.
இந்நிலையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் த்ரிஷா மற்றும் அனுஷ்கா இருவருக்கும் இடையே விளம்பரங்களில் நடிப்பதில் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.
டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதுவராக இருந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு தற்போது அனுஷ்காவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று வருடமாக விளம்பர தூதுவராக இருந்த த்ரிஷாவை அந்நிறுவனம் நீக்கி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது அனுஷ்கா கவனம் செலுத்தி வருவதால், அவர் இவ்விளம்பரத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விளம்பரத்தை வெளியிடலாம் என்று விளம்பர உரிமையாளர்கள் நினைக்கிறார்கள்.
த்ரிஷாவுக்கு தமிழில் விஷாலுடன் 'சமரன்', ஜீவாவின் அடுத்த படம், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கு 'தம்மு' ஆகிய படங்கள் இப்போது கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments: