• கொடூரமான வேடத்தில் நடித்த மைனா பட நடிகை



    ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' படத்தில் மைனா பட நடிகை சூசன் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார்.
    பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா'வில் பொலிஸ் அதிகாரியின் மனைவியாக நடித்த சூசன், தருண் கோபியின் 'பேச்சியக்கா மருமகன்' படத்தில் நடித்துள்ளார்.


    இதுகுறித்து நடிகை சூசன் கூறியதாவது, மைனாவில் என் கதாப்பாத்திரத்தை நிறைய பேர் வெறுத்தார்கள்.

    அதேபோல 'பேச்சியக்கா மருமகன்' படத்தில் எனது கொடூரமான கதாப்பாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன்.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது என்று வில்லி நடிகை சூசன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment