மதராஸபட்டிணம் நாயகி ஏமி ஜாக்சன், தெலுங்கில் ராம் சரணுடன் இணைந்து நடிக்கிறார்.
கொலிவுட்டில் 'மதராசபட்டினம்', பாலிவுட்டில் 'ஏக் தீவானா தா' படங்களில் நடித்த எமி ஜாக்ஸன், அடுத்து தெலுங்கில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய 'ஏக் தீவானா தா' படத்தில் நாயகன் பிரதீக் உடன் இணைந்து நடித்துள்ளேன்.
நானும் அவரும் நெருக்கமான காதலில் இணைந்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.
பிரதீக் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான், நானும் அவரும் அடிக்கடி சந்திப்பதாக பேச்சு நிலவுவதில் கொஞ்சம்கூட உண்மையில்லை என்று ஏமி ஜாக்சன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, நான் முதல் முதலாக தெலுங்கில் ராம் சரண் உடன் இணைந்து நடிக்கிறேன்.
தமிழில் விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடிக்கிறேன். இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று எமி ஜாக்ஸன் கூறியுள்ளார்.
0 comments: