தென்னிந்திய நட்சத்திர நாயகியாக உருவாகி வரும் காஜல் அகர்வால் ரஷ்ய மொழி கற்று வருகிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
மாற்றான் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் ஒரு மாதம் நடந்தது. இப்படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இங்கு படமானது.
இதையடுத்து, ரஷ்ய மொழியான ருஸ்க்கி இஸிகை தீவிரமாக கற்று வருகிறார் காஜல் அகர்வால்.
மாற்றான் படத்தில் நடிப்பதற்கு இந்த மொழி அதிகம் தேவைப்படுவதால் காஜல் அகர்வால் தீவிரமாக கற்று வருகிறார்.
0 comments: