ரஜினி கோச்சடையான் படப்பிடிப்பிற்காக இன்று காலை 4 மணிக்கு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் படத்தின் இயக்குனர் சவுந்தர்யா, மேற்பார்வை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரும் உடன் சென்றனர். மேலும் இவர்களுடன் படக்குழுவினர் 20 பேர் லண்டன் பயணமானார்கள்.
லண்டனுக்கு புறப்படுவதற்கு முன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
”கோச்சடையான் படப்பிடிப்பு லண்டனில் 20 முதல் 30 நாட்கள் நடக்கயுள்ளது. லண்டனிலேயே 40 சதவீத படப்பிடிப்பு படமாக்கப்படுகிறது. இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய ரஜினியை பார்க்க முடியும். படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். அநேகமாக தீபாவளிக்கு ரிலீசாகும். இதுவரை வந்த படங்களை விட மிக நன்றாக இப்படம் வரும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று ரஜினி கூறினார்.
இது குறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது :
மற்ற டெக்னீஷியன்கள் 21-ந்தேதி லண்டன் வருகின்றனர். கதாநாயகி தீபிகா படுகோனேயும் லண்டன் வருகிறார். ஏப்ரல் 6-ந்தேதிவரை படப்பிடிப்பு முடிந்தவுடன் மறுநாள் (7-ந்தேதி) ரஜினி சென்னை திரும்புகிறார் என்று கூறினார்.
0 comments: