• மீண்டும் திரையில் வனிதா



    கடந்தாண்டு குடும்ப வாழ்க்கை சர்ச்சைகள் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
    மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார்.


    ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், சின்னத்திரை நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார்.

    பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தருமாறு கோரி நீதிமன்றம் போனார் வனிதா.

    ஆனாலும் குழந்தையை தன்னிடம் கொடுக்க ஆகாஷும், தன் தந்தை விஜயகுமாரும் மறுப்பதாகக் கூறி காவல்துறை அலுவலகம், நீதிமன்றம் என அலைந்து திரிந்து பெரும் பரபரப்பை கிளப்பினார் வனிதா.

    ஆனாலும் குழந்தைப் பிரச்சினை தீரவில்லை. வனிதாவின் மூத்த மகன் விஜயஸ்ரீஹரி வர மறுத்து விட்டான். எனவே இரண்டாம் கணவரைப் பிரிந்த வனிதா, தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

    மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறுகையில், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதுப்படம் குறித்து அறிவிப்பேன்.

    ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தேன். எந்த அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment