• சௌந்தர்யாவை புகழும் ஆதி



    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார் என நடிகர் ஆதி கூறியுள்ளார்.

    தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்த அதில் நடித்து பெயர் வாங்கும் தி‌றமை படைத்தவர் நடிகர் ஆதி.

    அதற்கு நல்ல ஒரு உதாரணம் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த அரவான் படம். அந்த படத்தில் அவரது நடிப்பும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் நல்ல பெயரை பெற்று தந்தது.

    அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தில் ஆதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக ஆதி லண்டன் செல்லவிருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ரொம்ப உற்சாகமாக இருக்கேன். இந்தபடத்தில் அப்படி ஒரு அருமையான கதாபாத்திரம் எனக்கு. இந்த படத்தில் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் நல்ல திரைக்கதை, வசனம் எல்லாம் ரொம்ப அருமையாக எழுதி இருக்காங்க.

    முதன்முறையாக ஒரு பெண் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க போகிறேன். முதன்முதலாக என்னுடைய கதாபாத்திரம் பற்றி சௌந்தர்யா பேசும்போது, அவரை பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், ரொம்ப இயல்பாக, என்னுடைய கதாபாத்திரம் பற்றி சொல்லும் போது, சௌந்தர்யாவின் மெச்சூரிட்டி தெரிந்தது.

    யார்கிட்டேயும் அவங்க இதுவரைக்கும் ஒர்க் பண்ணியதில்லை. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கு. நிச்சயமாக சொல்றேன், சௌந்தர்யா எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார் என்றார்.

0 comments:

Post a Comment