• ஜெயராம், பாவனா மீது பாலிவுட் படக்குழு வழக்கு



    மாலிவுட்டில் ஜெயராம், பாவனா இணைந்து நடித்த ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ் என்ற படம் வெற்றியடைந்தது.
    இப்படத்தில் ஜெயசூர்யா, இந்திரஜித், சம்விருதா, சுனின், ரீமா கல்லிங்கல் ஆகியோரும் நடித்துள்ளனர்.


    இப்படத்தை சாஜி சுரேந்திரன் இயக்கினார். மிலன் ஜலில் தயாரித்தார்.

    இந்நிலையில் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் படம் பாலிவுட்டில் வெளியான 'நோ என்ட்ரி' படத்தின் கதை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அந்த படத்தின் கதையை திருடி படமாக்கிவிட்டதாக ஜெயராம், பாவனா, ரீமா கல்லிங்கல் உட்பட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் மீது 'நோ என்ட்ரி' படக்குழுவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    ஆனால் இயக்குனர் சாஜி சுரேந்திரன் இதனை மறுத்துள்ளார்.

    அவர் கூறியதாவது, பாலிவுட் படத்தை பார்த்து ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ் படத்தை எடுக்க வில்லை. இது என்னுடைய சொந்த படைப்பு என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment