• அக்கா வேடத்தில் நடிக்கிறார் மீனா?!



    கண்கள் பேசும் ஆயிரம் கவிதை .. என்பதற்கேற்ப அழகிய கண்கள் கொண்ட மீனா, திருமணத்திற்குப் பின்னர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. அம்மணிக்கு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் சினிமா ஆசை தொற்றிக் கொள்ள, பழைய நட்பு வட்டாரங்களின் நம்பர்களை தூசி தட்டி தூது விட்டார்.
    பழகிய பழக்கத்துக்காக!! பலர் வாய்ப்புகள் கொடுக்க முன்வந்தனர். அவர்களுக்கு எல்லாம் அம்மணி பதிலுக்கு ஷாக் கொடுத்தார்..அக்கா,அண்ணி வேடம் வேண்டாம்..மீண்டும் ஹீரோயின் தான் என பதிலளித்து. ஆனால் இதெல்லாம் மீனாவுக்கு ரொம்பவே ஓவர் என ஓரங்கட்டிக்கொண்டன சில, பல நட்பு வட்டாரம்.
    இந்நிலையில், விஜய்யின் கில்லி ஃபில்ம்ஸ் தயாரிக்கும் “சட்டம் ஒரு இருட்டறை” ரீமேக்கில் ஒரு முக்கிய ரோலில் மீனாவே தான் நடிக்க வேண்டும் என தவமாய் தவம் இருக்கிறாராம் அப்படத்தினை இயக்கும் அறிமுக இயக்குநர் ரமேஷ். இயக்குநர் வற்புறுத்தலுக்கு இணங்கி ஓகே சொன்னாரா இல்லை யதார்த்த்தை புரிந்து கொண்டு பிழைப்பை கவனிப்போம் என ஒப்புக் கொண்டாரா தெரியவில்லை? மீனா அக்கா வேடத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.
    மீனாப் பொண்ணு வீராப்பு என்னாச்சு!!

0 comments:

Post a Comment