• ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள Machi Anthem



    ஐபிஎல் 5 கிரிக்கட் போட்டிகளுக்காக சாருலதா மணி, ஸ்ரீ மதுமிதா பாடிய Machi Anthem ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    திரையுலக பாடகிகள் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.


    சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கட் போட்டிகளுக்காக பிரபல பின்னணி பாடகிகளான சாருலதா மணி, ஸ்ரீ மதுமிதா இருவரும் Machi Anthem என்ற பெயரில் பாடியுள்ளார்கள்.

    இவர்களில் ஸ்ரீ மதுமிதா உதயநிதி, ஹன்சிகா நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி "அழகே அழகே" என்ற பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் இருவரும் எழுதி, இசையமைத்த பாடியுள்ள Machi Anthem யூ டியுப்பில் பிரபலமடைந்த வருகிறது.

    சாருலதா மணி, ஸ்ரீ மதுமிதா இருவருடன் பிரபல பாடகர் முகேஷ் இணைந்து பாடியுள்ளார்.

    நடைமுறை பாணியிலான தமிழில் அமைந்துள்ள Machi Anthem, ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments:

Post a Comment