எதிர்காலத்தில் தன் மகன் ஷகீரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, எனக்கு பாடகராக வாய்ப்பு தந்தது எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் தான்.
இசை அமைப்பதற்கு இன்று போட்டி அதிகரித்து விட்டது. சொந்த செலவில் வந்து ஒரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்து விட்டு போங்கள் என சொல்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
அதனால் தான் தெலுங்கு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தியிடம் இசை உதவியாளராக பணியாற்றியும் நான் இசை அமைக்காமல் ஒதுங்கி விட்டேன்.
என் மகன் ஷகிர், பாடும் திறமை இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் அதிகம். நாங்க படத்தில் வில்லன் வேடத்தில் இயக்குனர் செல்வா அறிமுகப்படுத்தினார்.
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. வில்லன், குணசித்ர வேடம் என எந்த வாய்ப்பு வந்தாலும் நடிப்பதாக முடிவு செய்திருக்கிறார்.
பழைய நடிகர்கள் போல் அவரே பாடி அவரே நடிக்கவும் பயிற்சி பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் அவரை வைத்து படம் தயாரிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments: