• ராணுவ உடையுடன் விஜய்



    காக்கிச்சட்டை போட்டால் அதன்பின் அதை கழற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். தமிழ்சினிமாவின் கோட்பாடு அப்படி. இதன் காரணமாகவே போலீஸ் கேரக்டர் என்றால் சற்றே மிரண்டு ஓடுகிற வழக்கம் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கிறது.
    இன்னும் கொஞ்ச வருடத்திற்கு போலீஸ் கதைகளே வேண்டாம் என்கிறார் விக்ரம். சாமி படத்தின் வசூலை முறியடிக்கிற மாதிரி ஒரு போலீஸ் கேரக்டர் வந்தால் கூட தனது முடிவை மாற்றிக் கொள்கிற மாதிரியில்லை அவர். ஆனால் இந்த விஷயத்தில் விஜய் இன்னும் கெட்டி. போலீசாக நடித்தால் கூட யூனிபார்மை அருகில் அண்ட விட மாட்டார். ஆனால் தற்போது அவர் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் யூனிபார்ம் அணிகிறாராம். நல்லவேளையாக இது போலீஸ் கேரக்டர் இல்லை. ராணுவம். எந்தளவுக்கு இந்த யூனிபார்மை ரசிக்கிறார் என்றால் ஒரு சீன் சொன்னால் புரியும். காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சி. கடந்த வாரம் எடுக்கப்பட்ட அந்த காட்சியிலும் கூட இந்த ராணுவ உடையுடன்தான் நடித்திருக்கிறாராம் அவர்.

0 comments:

Post a Comment