• தாண்டவம் படத்தில் இணைந்த பாலாஜி



    தாண்டவம் படத்தில் துணைநடிகர் பாலாஜி, சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.
    கொலிவுட்டில் காதலில் சொதப்புவது எப்படி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே நடித்த பாலாஜி, தாண்டவம் படத்தில் நடித்துள்ளார்.

    தாண்டவம் படத்தை விஜய் இயக்க, சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமிஜாக்சன் நடிக்கின்றனர்.


    இவர்களுடன் இணைந்த அனுபவம் குறித்து நடிகர் பாலாஜி கூறியதாவது, சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது.

    இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் நடிப்பது நிறைய அனுபவங்களை தருகிறது.

    இந்த படத்தில் எனக்கு கொடுத்த கதாப்பாத்திரம் ரகசியமானது. தற்போதைக்கு இந்த ரகசியத்தை தெரிவிக்கக்கூடாது.

    மேலும் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளராக இருந்த நாராயன் இயக்கத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் சிரமங்களை உணர்ந்தவராக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment