• ஷக்தி நடிப்பில் ஏதோ செய்தாய் என்னை படம்



    திருமணத்திற்கு பின்பு நாயகன் ஷக்தி, 'ஏதோ செய்தாய் என்னை'  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    கொலிவுட்டில் நாயகன் ஷக்தி, நாயகி பேராண்மை லியா இருவரும் 'ஏதோ செய்தாய் என்னை' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.


    இப்படத்தை அறிமுக இயக்குனர் எல்வின் இயக்கியுள்ளார். சினிமாவில் நாயகன் ஷக்திக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து எல்வின் கூறியதாவது, நான் திருச்சியில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளேன்.

    இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு, இயக்குனர்கள் முகவரி துரை, சுப்ரமணிய சிவா இருவரிடமும் உதவியாளராக பணியாற்றினேன்.

    தற்பொழுது 'ஏதோ செய்தாய் என்னை' என்ற புதிய படமொன்றை இயக்கியுள்ளேன். இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இயக்கியுள்ளேன்.

    'ஏதோ செய்தாய் என்னை' திரைப்படம் நாயகன் ஷக்திக்கு சினிமாவின் ஒரு திருப்பமான படமாக அமையும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment