கதாநாயகிகள் வாய்ப்பு வேண்டாம், எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன் என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவனை மணந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் சோனியா அகர்வால்.
நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.
கதாநாயகிகள் வேடங்களில் நடித்து மீண்டும் எனக்குரிய இடத்தை பிடிப்பேன் என்றார். அதன்படி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் வெளியாகி எடுபடாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஓய்வுக்காக சண்டிகர் சென்றார். அவரது சகோதரர் பிறந்த தினத்தையொட்டி சமீபத்தில் சென்னை திரும்பினார். தனது வீட்டில் நண்பர்கள், நெருக்கமான உறவினர்களுக்கு விருந்து அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணாக நானிருக்கிறேன். முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது எல்லாவற்றையும் முறையாக அணுகி செயலாற்றுகிறேன்.
என் வாழ்க்கை மீண்டும் புதிதாக வடிமைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இனி வரும் படங்களில் எனக்கு பொருத்தமான வேடங்களில் மட்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
0 comments: