கொலிவுட்டில் இளைஞர் பட்டாளத்தின் சூப்பர் ஸ்டார் சிம்பு, தன்னுடைய LOVE ANTHEM பற்றி பேட்டியளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, YOUTUBEல் LOVE ANTHEM நிறைய பேர் பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் எல்லாம் நான் செய்யவில்லை.
இப்போதைக்கு LOVE ANTHEM இறுதி வடிவம் வெளியிடவில்லை. ஒரு TEASER தான் வெளியிட்டோம்.
அந்த TEASER எதற்கு என்றால் இந்த மாதிரி ஒரு CONCEPTல் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன் என்பதை ரசிர்களுக்கு தெரியப்படுத்தவே என்று கூறியுள்ளார்.
அதற்கே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.
ஏனென்றால் LOVE ANTHEM முழுவதும் ஆங்கில வார்த்தைகள் அடங்கியது. அதை எப்படி மக்கள் எடுத்து கொள்வார்கள் என்பதில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதில் வரும் ஒரே தமிழ் வார்த்தை 'காதல்' மட்டும் தான்.
அமெரிக்காவிற்கு சென்று LOVE ANTHEM-க்கு இறுதிவடிவம் கொடுத்து விட்டேன். இன்னும் 1 அல்லது 2 மாதங்களில் அது தயாரானதும் வெளியிடுவேன் என்று சிம்பு பேட்டியளித்துள்ளார்.
0 comments: