• சித்தார்த் மீது கடும் கோபத்தில் ஸ்ருதிஹாசன்



    தன்னை பற்றி வதந்திகளை பரப்புவதால் சித்தார்த் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.
    பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் சித்தார்த். இவருடன் தெலுங்கு படத்தில் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.


    அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி சந்தித்து கொண்டிருந்த இருவரும் திடீரென்று பிரிந்து விட்டனர்.

    அவருடன் ஜோடியாக நடிப்பதாக இருந்த தெலுங்கு படத்தில் இருந்தும் விலகிவிட்டார் ஸ்ருதி.

    இதுபற்றி அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறும் போது, சித்தார்த், ஸ்ருதி பிரிவு என்பது சுமுகமாக நடக்கவில்லை. இருவரும் பிரிந்த பிறகு சித்தார்த்திடம் பேசுவதை தவிர்த்து விடுகிறார் ஸ்ருதி.

    இந்நிலையில் ஸ்ருதி பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறதாம். இதற்கு சித்தார்த் தான் காரணம் என்று நினைக்கிறார் ஸ்ருதி. மேலும் பிரிவுக்கு பிறகு நடிப்பதில் அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்றார்.

    தன்னைப் பற்றி சித்தார்த்தான் வதந்தி பரப்புகிறார் என்று தகவல் பரவியதையடுத்து மனம் நொந்து போனாராம் ஸ்ருதி.

0 comments:

Post a Comment