தமிழ், தெலுங்கு திரையுலகில் அசத்தி வரும் அமலாபால், இந்தி திரை உலகிலும் அசத்த இருக்கிறார். தமிழில் சமீபத்தில் சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளியான படம் காதலில் சொதப்புவது எப்படி. புதுமுகம் பாலாஜி மோகன் இயக்கி இருந்த இப்படத்தை, சித்தார்த்தே தயாரித்து இருந்தார்.
பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இப்போது இந்தியிலும் ரீ-மேக் செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். இதில் ஹீரோவாக சித்தார்த்தும், ஹீரோயினாக அமலாபாலுமே நடிக்கவுள்ளனர். இதன்மூலம் இந்தி சினிமாவிலும் கால்பதிக்க இருக்கிறார் அமலாபால். மேலும் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் அமலாபால்
0 comments: