தன் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ”கோச்சடையான்” படப்பிடிப்புக்காக இன்று மாலை லண்டன் புறப்பட்டு செல்கிறார் சூப்பர் ஸ்டார்.
மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் “கோச்சடையான்”, புராண காலத்தில் வாழ்ந்த சிவபக்த மன்னனை பற்றிய கதையாகும். 3டி படமாக எடுக்கப்படும் இப்படத்தில் ‘மோஷன் கேப்சர்ஸ்’ என்கிற டெக்னாலஜியை முதன் முறையாக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசையில் பாடல் பதிவு முடிந்துள்ளது. கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார்.
கோச்சடையான் படப்பிடிப்பு லண்டனில் 20 - 30 நாட்கள் நடக்கிறது. இதற்காக லண்டன் செல்ல இன்றும், நாளையும் ரஜினிக்கும் மற்ற டெக்னீஷியன்களுக்கும், விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுயுள்ளது. ரஜினி இன்று இரவும், மற்ற டெக்னீஷியன்கள் நாளையும் லண்டன் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர் படக்குவினர்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்குனர் மேற்பார்வை செய்கிறார். கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்க உள்ளனர். கிராபிக்சில் நாகேசும் நடிக்கிறார்.
0 comments: