முன்னணி கதாநாயகிகள் பலர் தங்களுடைய நடித்தர குடும்பத்திலிருந்து படி படியாக முன்னேறி தமிழ் பட உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ”மைனா” படத்தின் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய கதாநாயகி அமலா பால். இவர் சிந்து சமவெளி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்துள்ள அமலா பால், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். இவர் கேரளாவில் உள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர்.
இதையடுத்து, தமிழில் ”முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் தான். இவருடைய தந்தை மீன் வியாபாரம் செய்தவர். பூர்ணாவுக்கு சகோதர – சகோதரிகள் மொத்தம் எட்டு பேர் இருக்கிறார்கள்.
இப்படி வாழ்க்கையில் தன்னுடைய திறமைகளை வைத்து படி படியாக முன்னேறி சிறப்பான அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகை அமலாபாலுக்கும், பூர்ணாவுக்கும் பிலிமிக்ஸ் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
0 comments: