இன்று ( 16-03-12 ) மாசி, கழுகு, விண்மீன்கள், கர்ணன் ஆகிய நான்கு படங்கள் திரையில் ரிலீஸாகின்றன.
மாசி :
”ஆக்ஷன் கிங்” அர்ஜூன், மாசிலாமணி என்ற கேரக்டரில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த அர்ச்சனா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஹேமா நடிக்கிறார். மாசி படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இ.கிச்சா. கடந்த வாரமே ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட படம் இன்று ரிலீஸாகிறது.
கழுகு :
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், நடிகர்கள் கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் உடல்களை தேடி கண்டுபிடித்து தரும் கேரக்டரில் கிருஷ்ணா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
விண்மீன்கள் :
விக்னேஷ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “விண்மீன்கள்”. ’மாஸ்கோவின் காவிரி’ பட நாயகன் ராகுல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஜா ஐயர் நடித்துள்ளார். நா. முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜீபின்.
கர்ணன் :
1964-களில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட்டான படம் “கர்ணன்”. நடிகர் திலகம் ‘சிவாஜி கணேசன்’ கர்ணனாகவே மாறி இப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நவீன மெருகேற்றலுடன் கர்ணன் படம் மீண்டும் ரிலீஸாகிறது!. ராஜ் டி.வி புதிய கர்ணன் படத்தை தமிழகம் முழுவது வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.
0 comments: