ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி, நிஜத்திலும் உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற தகவல் தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.
இந்த விஷயம் உதயநிதியின் வீட்டிற்கும் தெரிய வர, அவரது காதல் மனைவி கிருத்திகா உதயநிதியுடன் ஊடலில் இருக்கிறாராம். அதனால் தான் ஓகே ஓகே படத்தின் மீடியா மீட்டின் போது, படத்தில் உங்களுக்கும் ஹன்சிகாவுக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கிறதாமே? அதை பார்த்து விட்டு உங்கள் மனைவி என்ன சொன்னார்கள் என்ற கேள்விக்கு நான் நெருக்கமாகவே நடிக்கவில்லை என்று சொன்னார் போலும்.
ஆனால், அதே நாளில், படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ் அளித்த பேட்டியில் ஹன்சிகாவுக்கும், உதயநிதிக்கும் இடையே முத்தக்காட்சிகள் தான் இல்லை, ஆனால் நெருக்கமான காட்சிகள் இருக்கின்றன என்று கூறியிருந்தார். டைரக்டர் ஒன்று சொல்ல உதயநிதி ஒன்று சொல்வதற்கு காரணம் இது தானோ? ஓகே ஓகே!!
0 comments: