தமிழ்படம் நாயகி தீஷா பாண்டே, மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் நிறைவுபெற்றாலும் ஒரே ஒரு பாடல் பாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்த பாடல்காட்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தீஷா, ஏமாற்றிவருவதாக படத்தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே” எனத்தொடங்கும் பாடல் இன்னும் படமாக்கப்படாமல் உள்ளது.
இப்படப்பிடிப்பிற்கு நாயகி தீஷா பாண்டே வராமல் ஏமாற்றி வருகிறார். அலைபேசியில் அவரை தொடர்பு கொண்டால் சிங்கப்பூரில் இருக்கிறேன். மலேசியாவில் இருக்கிறேன் என்று கூறுகிறார்.
இவ்வாறு படப்பிடிப்புக்கு தீஷா வராத காரணத்தினால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்று ராஜேஸ்வரி வேந்தன் கூறியுள்ளார்.
0 comments: