• குளியலறையில் வழுக்கி விழுந்த கவிஞர் வாலி



    பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி குளியறையில் வழுக்கி விழுந்ததில் கை மற்றும் இடுப்பு பகுதியில் அடிபட்டுள்ளது.
    எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டே இப்போது உள்ள சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட மூன்று தலைமுறையினருக்கு பாடல் எழுதி வருபவர் கவிஞர் வாலி.


    சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்ததில் இடுப்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலி வீடு திரும்பியுள்ளார்.

    இது குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், பலத்த காயம் என்பதால் இன்னும் 2 மாத காலத்திற்கு வாலியை ஓய்வில் இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment